மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது

0 606
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள மேல செட்டி தெருவில் மளிகை கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ. 5000 பணத்தைச் திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி சுபத்ரா(44). இவர்கள் மண்ணச்சநல்லூர் மேல செட்டி தெருவில் கடந்த ஐந்து வருடங்களாக விவி என்ற மளிகை கடை நடத்தி வருகின்றனர். 7 ந்தேதி இரவு வழக்கம் போல் இரவு 9 மணிக்கு கடை பூட்டிவிட்டு சென்றனர்.நேற்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூபாய் 5000 பணம் திருட்டு போனது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலத்தில் சுபத்ரா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.விசாரணையில் மணச்சநல்லூர் மேல காவல்கார தெருவை சேர்ந்த  சாந்தகுமார்(34) பணத்தை திருடியது தெரியவந்தது. பின்னால் அவர் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.