துணை முதல்வர் உதயநிதியைப் போல் தெளிவான இளைஞரை பார்க்க முடியாது: சுப.வீரபாண்டியன் புகழாரம்

0 230
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 17 திருச்சி மாவட்டம், மணப்பாறயை அடுத்த கண்ணுடையான்பட்டியில்தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், பெரியாரின் துணிச்சல், அண்ணாவின் கனிவு, கலைஞரின் ஆளுமை எல்லாம் சேர்ந்து நமக்கு முதலமைச்சராக கிடைத்திருக்கிறார். மிகச் சரியாக சொல்ல வேண்டுமானால் திமுக விற்கு கிடைத்ததை போல தொண்டர்கள் உலகத்தில் எந்த கட்சிக்கும் கிடைத்ததில்லை. அதேபோல வாழையடி வாழையென தலைவர்களும் வேறு கட்சிகளுக்கு வாய்த்தது இல்லை. இன்றைக்கு குறைத்து சொல்வதற்காக சொல்லவில்லை. அதிமுகவினர் சட்டமன்றத்திற்கு வருகிறார்கள் எடப்பாடி முகத்தை செங்கோட்டையன் பார்க்கவில்லை. செங்கோட்டையன் முகத்தை எடப்பாடி பார்க்கவில்லை. அது மட்டும் இல்லை நான் இரண்டு நாட்களுக்கு முன்னால் விருதுநகருக்கு போயிருந்தேன் அங்கு பெரிய சண்டை நடக்கிறது. திமுகவுக்கு அதிமுகவுக்கு அல்ல பாண்டியராஜனுக்கும், ராஜேந்திர பாலாஜிக்கும் சண்டை நடக்கிறது. ரெண்டு பேரும் அதிமுகவில் தான் இருக்கின்றனர். ஆனால் திமுக என்பது கட்டுக்களையாத ஒரு கோட்டை யார் எந்த பொறுப்பில் இருக்கிறார்களோ அந்த பொறுப்பு மிகச் சரியாக நிறைவேற்றப்படும்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் ரூ. 2146 கோடியை தர மாட்டோம் என்று சொன்னபோது நம்முடைய முதலமைச்சர் பத்தாயிரம் கோடி தருவதாக இருந்தாலும் என் பிள்ளைகள் படிப்பை கெடுக்கிற ஒரு திட்டத்தை ஏற்க மாட்டேன் சொன்னவர்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதியை போல அத்தனை தெளிவான இன்னொரு இளைஞரை நாம் பார்க்க முடியாது. 47 – 48 வயதில் இத்தனை தெளிவான ஒரு இளைஞன். 17000 பேரில் 182 பேரை தேர்ந்தெடுத்து இன்றைக்கு நான் போகிற ஊர்களில் எல்லாம் எனக்கு முன்னால் இளம் தலைமுறை பேச்சாளர் இன்னும் ரெண்டு பேர் பேசுறாங்க அவங்க யாருன்னா உதயநிதி தேர்ந்தெடுத்த 182 பேர் தமிழ்நாட்டில் மறுபடியும் இன்னொரு தலைமுறையை தம்பி உதயநிதி உருவாக்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் நீங்கள் பார்த்தால் கல்வி மட்டுமல்ல ஒரு அமைதி இருக்கு மக்கள்கிட்ட ஒருவருக்கொருவர் ஒரு அன்பிருக்கு. 96 வருஷத்துக்கு முன்பு 1929 செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னதை 1989 ல் சட்டம் ஆக்கியவர் தலைவர் கலைஞர். எல்லோரும் மனிதர்கள் எல்லோரும் சகோதரர்கள் பெண் என்பதால் கீழானவன் இல்லை ஆண் என்பதால் மேலானவன் இல்லை இரண்டு பேரும் சமமானவர்கள் இதை சொல்லுவது தான் திராவிட இயக்கம் அதை தொடங்கி வைத்தவர் எங்கள் அய்யா பெரியார், தொடர்ந்தவர் அண்ணா, வழிநடத்தி வந்தவர் கலைஞர், இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறவர் ஸ்டாலின் நாளை நடத்துவார் உதயநிதி என அவர் பேசினார்.கூட்டத்தில் திமுகவினர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர்  திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர்
சுப வீரபாண்டியன் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்பிக்களை இழிவு படுத்தினால் அது மக்களையும் வந்து சேரும். நாங்கள் வாக்களித்து, தேர்ந்தெடுத்து அனுப்பியவர்களை நாகரீக மற்றவர்கள் என்று சொன்னால் நாடே கொந்தளிக்கும். அது தமிழ் நாட்டையே சொன்னதாகத்தான் பொருள். அவர்கள் என்ன திருப்பி கேட்கிறார்கள் என்று சொன்னால், மோடியை சொன்னதாக இருந்தால் இந்தியாவையே சொன்னதாக ஆகிவிடாதா என்று, நாங்கள் திமுக கூட்டங்களில் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்குறைவாக விமர்சித்து இருக்கிறோமோ நீங்களும் திமுக அரசின் கொள்கைகளை விமர்சியுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை விமர்சியுங்கள். அதெப்படி ஒட்டுமொத்தமாக நாகரீகமற்றவர்கள் என்று சொல்லலாம். நாங்களும் ஒரு நாளும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்வதில்லை. நாங்கள் செய்வது ஜனநாயகம். அவர்கள் செய்வது அராஜகம்.
மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி. சீட்டுகள் என்ற முடிவால் . மாநில அரசுக்கென உள்ள கொள்கை முடிவை மாற்றி, ஒவ்வொரு திருமண விழாவிலும், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு பேசுவது குறித்த கேள்விக்கு…

இது ஒரு எதிர்வினை . எப்போதுமே Reaction for everyAction என்று சொல்வார்கள். மக்கள் தொகை தமிழ்நாட்டில் குறைந்துள்ளது. ஏன் குறைத்தோம். யார் சொல்லி குறைத்தோம். ஓர் அரசு மக்கள் தொகையை குறைக்க சொன்னார்கள் அதுதான் நாட்டிற்கு வளர்ச்சிக்கு நல்லது என்றார்கள். அரசு சொன்னதை கேட்டோம். கேட்டு குறைத்ததற்கு தண்டனையா , மக்கள் தொகை குறைந்தால் எங்கள் உரிமை குரல் குறையும் என்றால் எனவே,எதிர்ப்பதற்கு அல்லது எங்கள் எதிர்ப்பை காட்டுவதற்கு எல்லோரும் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏன் வருகிறது.சொல்ல வைத்தவர்கள் யார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கைகளை கேட்டு பின்பற்றியதால் பாதிப்பு வரும் போது எதிர்ப்பும் வருவது இயல்புதானே. நாம் திராவிட நாடு கோரிக்கையை எப்போதோ கைவிட்டுவிட்டோம். ஆனால் ஒன்றிய அரசு அதனை கைவிட அனுமதிக்காது என்றே தெரிகிறது.மீண்டும் திராவிட நாட்டின் எழுச்சியை இந்தியா பார்க்கப் பேகிறது. முதலமைச்சர் சொல்வது போல . தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை ஒன்றிய அரசு பார்த்திருக்கிறது, சுகாதார வளர்ச்சியை பார்த்திருக்கிறது. சமூக நீதியை பார்த்திருக்கிறது. மீண்டும் தமிழ்நாட்டின் போர்க்குணத்தையும் பார்க்க விரும்பினால் அதனையும் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெளிவாக கூறியுள்ளார் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.