“முதியவர்கள் அதிக அளவில் எழுத பழகிய முயற்சி என்பது எங்களால் அல்ல…அவர்களின் விடா முயற்சி தான்” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் 100 சதவீத எழுத்தறிவு இயக்கம் வெற்றி விழா நிகழ்ச்சி புங்கனூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி அக்டோபர் 8ம் தேதி நடைபெற்றது.
கிராம பகுதியில் உள்ள முதியோர்கள் கல்வி கற்கும் பொருட்டு எழுத்தறிவு இயக்கம் மூலம் பல்வேறு கட்ட சிறப்பான நடவடிக்கைகளை மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் இணைந்து பல முதியவர்களுக்கு இன்று கல்வியறிவை புகுத்தி உள்ளனர் என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் மணிகண்டம் ஒன்றியத்தில் 100 சதவீத எழுத்தறிவு இயக்கம் வெற்றி விழா நிகழ்ச்சியானது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்.. கடந்த 2 வாராங்களுக்கு முன்பு மணிகண்டம் ஒன்றியத்தில் நடந்த 100 சதவீத திட்ட தொடக்க விழாவில் அஞ்சலை என்ற பாட்டியுடன் அமர்ந்து கல்வி கற்கும் முறையை பார்த்து சென்றேன் அப்போது அந்த பாட்டியிடம் நான் மீண்டும் வரும்போது நீங்கள் சிறப்பாக எழுதி பழகி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

கூறியது போன்றே அழகாக எழுதி பழகி உள்ளார். முதியவர்கள் அதிக அளவில் எழுத பழகவும், எழுத்து கூட்டி படிக்க தெரிந்திருக்கும் இந்த முயற்சி என்பது எங்களால் அல்ல….அவர்களின் விடாமுயற்சி தான் காரணம். அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்ற எழுத்தறிவு அமைப்பை ஏற்படுத்தி உள்ள ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சிந்துஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், எஸ்.ஏ.எஸ் கல்வி குழும நிர்வாகி ஜெபஸ்டின், வட்டார கல்வி அலுவலர் அருணா தேவி, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் ஆஷா தேவி, மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஜெயராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…. https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo