பழுதடைந்த மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிகுடி கிராமத்தை அடுத்துள்ள ஹரிபாஸ்கர் காலனியில் மிகவும் மோசமான நிலையில் மின் கம்பம் உள்ளது. கடந்த ஆறு மாத காலமாக பல முறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பருவமழை துவங்கவுள்ள நிலையில் அடுத்த சில நாட்கள் மழை பெய்தால் கண்டிப்பாக மின்கம்பம் தங்களது வீட்டில் விழுந்து விடும் என்கிற அச்சத்தோடு உள்ளனர். உடனடியாக இந்த மின் கம்பத்தை மாற்றி அமைத்தால் தங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்பது ஹரிபாஸ்கர் காலனியில் உள்ள பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.