மணப்பாறை அருகே இராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி

0 231
Stalin trichy visit

திருச்சி, பிப். 17  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இராயன்பட்டி கிராமத்தில் புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு புனித செபஸ்தியார் தேவாலய முன்புள்ள திடலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, மணப்பாறை ஒன்றியக்குழு தலைவர் அமிர்தவள்ளி ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 650 காளைகள் வாடிவாசலில் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளைகளை 300 காளையர்கள் போட்டிபோட்டு அடக்கி வருகின்றனர்.

இதில் வெற்றி பெறும் காளையின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் அமைச்சர் கட்டில், சைக்கிள், சேர்,
சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும்,
பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.