ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு போட்டி

0 358
Stalin trichy visit

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையின் போது தொடங்கி தொடர்ந்து சில மாதங்கள் நடைபெறும். தென் மாவட்டங்களைப் போலவே திருச்சி மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெகுவிமரிசையாக நடைபெறும்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் ஒவ்வொரு ஆண்டும் தை 3 ம் நாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
ஆவாரங்காடு, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் 4 கிராமங்களின் கோவில் காளைகளும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் முதலில் வாடிவாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் 4 கோவில்காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது. கிராமங்களில்
இதையடுத்து கால்நடை மருத்துவக்குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலின் பின்புறம் டோக்கன் முறையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதே போல் மருத்துவக்குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் காளையர்களும் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவாக வீரர்கள் ஜல்லிக்கட்டு களத்தில் களமிறங்கினர். வீரர்கள் களத்தில் உறுதிமெழி எடுத்துக் கொண்ட பின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது.

அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில
மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில
காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்… என்று
கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியத்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அனைத்து வெற்றி வானை சூடினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில்
சில்வர் பாத்திரங்கள், , கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும்,
பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும்
வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை
உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை
களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
போட்டியில 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதில் கலந்து கொண்ட 580 காளைகளில் ஒரு காளை தகுதி நீக்கம் செய்யப்பட்டு 579 காளைகள் வாடி வாசலில் களம் இறக்கப்பட்டன.
237 மாடுபிடி வீரர்கள் 40 பேர் வீதம் 6 சுற்றுகளாக களமாடினர். சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டம், புகையிலைப் பட்டி காரி மாட்டிற்கு எல்இடி டிவியும், 21 மாடுகளை பிடித்த மாடு பிடி வீரர் புதுக்கோட்டை மாவட்டம், பிடாரம்பட்டி சசி என்பவருக்கு எல்இடி டிவியும் பரிசாக வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.