மணப்பாறை அருகே தீராம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி

0 150
Stalin trichy visit

திருச்சி, ஜன.31  மணப்பாறை அருகே தீராம்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே உள்ள தீராம்பட்டி கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் மற்றும் செபஸ்தியார் தேவாலய பொங்கல் விழாவை முன்னிட்டு ஆலயம் முன்புள்ள திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. காளைகளும் மாடு பிடி வீரர்களும் முறையான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே போட்டியில்  பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில
மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் செல்வதும், சில
காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்… என்று
கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியடிப்பதும் ஜல்லிக்கட்டு களத்தை ஆரவாரப்படுத்தியுள்ளது.

இதில் வெற்றி பெறும் காளையின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில், டிரஸ்சிங் டேபிள், சைக்கிள்,
சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும்,
பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. போட்டியில 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.