திருச்சியில் திமுகவை கண்டித்து அதிமுக ப.குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த விடியாத அரசு என்றும், திமுக அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் அரியமங்கலம் பகுதி கழகம், திருவெறும்பூர் காட்டூர், சக்தி நகரில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி மற்றும் வட்ட கழக செயலாளர்கள் RP.கணேசன், விஸ்வநாதன், NSP.ரவிசங்கர், தெய்வமணிகண்டன், சங்கர், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் S.சகாதேவ்பாண்டியன், வழக்கறிஞர் சின்னதுரை, மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி கண்டனங்களை தெரிவித்தார்கள்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8