துறையூர் அருகே தனியார் பள்ளியில் ரூ.12 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

0 58
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 17  துறையூர் அருகே ஜன் னல் கம்பியை அறுத்து தனியார் பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.12 லட்சத்தை திருடிச் சென்றனர்.

திருச்சி மாவட்டம்,துறையூரில் இருந்து திண்ணனூர் செல்லும் சாலையில் கரட் டாம்பட்டி பகுதியில் ஒருதனியார் பள்ளி செயல்பட்டுவரு கிறது. நேற்று காலை பள்ளியின் பாதுகாவலரான செல்வ ராஜ் என்பவர் வழக்கம்போல் பள்ளி முதல்வர் அறையைத் திறக்கச் சென்றுள்ளார். அப்போது, அறையின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டும், ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டும், கதவு திறந்த நிலையிலும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிய டைந்தார்.

உடனடியாக அவர் பள்ளி முதல்வருக்கு தகவல் தெரிவித் தார். விரைந்து வந்த பள்ளி முதல்வர், அலுவலகத்தில் சென்று பார்த்தபோது, பள்ளி மாணவர்களிடம் இருந்து சீருடைக்காக வசூல் செய்யப்பட்டிருந்த பணம் மற்றும் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணம் என காசாளரின்மேஜை டிராயரில் இருந்த ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் திருடப்பட் டிருந்தது உறுதி செய்யப்பட் டது.

இதுகுறித்து தகவல் அறிந்த புலிவலம் போலீசார் சம்பவ |இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், நேற்று முன்தினம் இரவு பள்ளியின் பின்புறம் உள்ள ரெடிமேடு சுற்றுச்சுவ ரின் 2சிமெண்டு பலகைகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

பின் னர், பள்ளி முதல்வர் அறையில் இருந்த ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்தனர். அங்கு, முதல்வர் அறைக்கு அருகில் உள்ள அலுவலகத்தில் காசாளரின் மேஜை டிராயரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சத்து 80 ஆயிரத்தை திருடிக்கொண்டு, தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, ஜீயபு ரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கதிரவன் நேரில் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய் தார். மேலும், தடயவியல் நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மற்றும் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் நிலா திருட்டு நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த வாறே அருகில் உள்ள காட் டுப்பகுதிக்குள் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. அதுயாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இச்சம்பவம் குறித்து பள்ளியின் பாதுகாவலர், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோரி டம் தனித்தனியாக புலிவலம் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் பள்ளியில் புகுந்த மர்மநபர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்ப குதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.