அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

0 34
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 24  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உட கோவிலாகவும், 108 வைணவ திருத்தலங்களில் 4-ம் தலமாக வும் விளங்குகிறது. இக்கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் எனப்” படும் திருமஞ்சன விழா நேற்று நடந்தது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து யானை வரவழைச் கப்பட்டது. அன்பில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பட்டர். கள், ஸ்தல ஸ்தானிகர்கள் உள்ளிட்டோருடன் மேளதாளம் முழங்க யானை மீது புனிதநீர் கொண்டு வரப்பட்டு, உற்சவர் சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம், திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெற்று, மங்கள ஆரத்தியுடன் பக்தர்களுக்கு பெருமாள் சேவை சாதித்தார். மூலவர் பெறு மாளுக்கு தைலக்காப்பு செலுத்தப்பட்டதால், நேற்று முதல் 48 நாட்கள் வரை திருவடி சேவை கிடையாது. மேலும் இந்த கோவிலுக்கு சுமார் 40 ஆண்டுகளாக ஜேஷ்டாபிஷேக நிகழ்ச் சிக்கு பிறகோவிலில் இருந்து யானையை வரவழைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுதான் ஸ்ரீரங்கப் கோவிலில் இருந்து யானை வரவழைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் மங்கம்பாள்புரம் ஊராட்சி தலைவர் அருண்காந்தி, த.வெ.க. ஒன்றிய செயற்குழு உறுப் பினர் சதீஷ் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், பட்டர் ஆராமுதன் உள் பட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.