தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

0 441
Stalin trichy visit

திருச்சி, ஏப்.10  பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் .அருண் நேரு அவர்களை ஆதரித்து முசிறி மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உமையாள்புரம், வெள்ளூர், சாலப்பட்டி, காமாட்சி பட்டி, தொட்டியபட்டி, வெள்ளாளப்பட்டி, ராசிபுரம் ஆகிய பகுதிகளில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அரசின் சாதனைகளை கூறி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி , மாநகராட்சி மேயர் அன்பழகன்  மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்  தியாகராஜன்  ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், இந்தியா கூட்டணியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.