இந்தியாவை காப்பாற்ற உதயசூரியனுக்கு வாக்களிப்பீர் : ஆ.ராசா பிரச்சாரம்

0 280
udhay

பெரம்பலூர், ஏப். 10 பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பாகப் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா வி.களத்தூர் கிராமத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மொழியை கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி நினைக்கி றார். ஒவ்வொரு மாநிலத்திலும் உடைகள் மாறும், உணவுகள் மாறும், மொழிகள் மாறும். இதையெல்லாம் பிரதமர் ஒழித்து விட்டு ஒரேநாடு, ஒரே இந்தியா என்று கொண்டுவர நினைக்கிறார். காமராஜர், எம்ஜிஆர் கொண்டு வந்த மதிய உணவுத்திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றியமைத்து முட்டை வழங்கி சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தியவர் கலைஞர். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாதபடி காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்தான். பிரதமர் நரேந்திர மோடியின் தவறை சுட்டி காட்டிய ஒரே காரணத்திற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிறையில் இருக்கிறார். அதேபோல் ஜார்கண்ட் முதலமைச்சர் சோரனும் சிறையில் இருக்கிறார். எதிர்த்து பேசினால் உடனே சிறைவாசம். இது தான் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி. இந்தியாவைக் காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே குரலில் அழைக்கிறார். அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான் அன்னியூர் சிவா, மாநில நிர்வாகி துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல் ஹிதா இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத் தில் உள்ள ஈச்சங்காடு, அர சலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளை யார் பாளையம் உள்ளிட்ட கிராமப் புறங்களில் திமுக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியச்செயலாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்., பெரம்பலூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் 10ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய புதிய தொழிற்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மலையாளப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளைக் கொண்டு ஜவ்வரிசி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வாக்கு சேகரிப்பின் போது திமுக முன்னாள் மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்செல்வ குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் குதரத்துல்லா, விசிக கட்சியின் வேப்பந்தட்டை ஒன்றியசெயலாளர் பெரம்பலூர் நகர செயலாளர் தங்க சண்முகசுந்தரம் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர் வாகிகள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர் கே.என் அருண் நேரு தொண்டமாந்துறை, பூஞ்சோலை, கோரையாறு, தழுதாழை, அரும்பாவூர், அ. மேட்டூர், மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பெரியம் மாபாளையம், பூலாம்பாடி, கடம்பூர், கள்ளப்பட்டி, உடும்பியம், வெங்கனூர், கிருஷ்ணாபுரம், வெண்பாவூர், பாண்டகப்பாடி, கை.களத்தூர், பில்லாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

trichymail

Leave A Reply

Your email address will not be published.