கை.களத்தூர் கொலை வழக்கு : பெரம்பலூர் எஸ்பி. விளக்கம்
பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
பெரம்பலூர் எஸ்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது. பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் கிராமத்தில் கடந்த 17ம் தேதி, காலை 8 மணியளவில் தேவேந்திரன் மணிகண்டன் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதில் இருவருக்கும் கைகலப்பும் ஏற்பட்டது. அதன் பிறகு காலை 9.30 மணி அளவில் தேவேந்திரன் மணிகண்டனை அரிவாளால் வெட்டியதில் அவர் இறந்தார்.
கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் கைகளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று உள்ளே நுழைந்து 2 கம்ப்யூட்டர்,டேபிள் சேர்கள் மற்றும் ஜன்னலை உடைத்து விட்டனர்.தகவல் அறிந்து நானும் டிஎஸ்பியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அந்த சம்பவத்தை தடுத்து விட்டோம்
கட்டுப்படுத்தி விட்டோம். தொடர்ந்து ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திசமாதானப்படுத்தி இறந்தவர் சடலத்தைஉறவினர்களிடம் கொடுத்து விட்டோம். அவர்கள் உடலை அடக்கம் செய்து விட்டனர் இறந்தவருக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து பொருட்களை உடைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜாதி ரீதியான கொலை என ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.தேவேந்திரன் மணிகண்டன் ஆகியோருக்கு இடையேயான தனிப்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது என்பதுதான் உண்மை.
கொலை சம்பவம் நடந்தவுடன், அவரது உறவினர்கள் ஆத்திரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பொருட்களை உடைத்துள்ளனர் அதற்கும் கட்சியினர் யாருக்கும் அதில் சம்பந்தமில்லை. தேவேந்திரனுக்கும் மணிகண்டனுக்கும் டீக்கடையில் தகராறு ஏற்பட்டவுடன் மணிகண்டன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வாய்மொழியாக புகார் அளித்துள்ளார். இப்போது வேறு ஒரு தரப்பினரி புகார் தொடர்பான இடம் ஸ்டேஷன் பணியில் இருந்த ஏட்டு ஸ்ரீதருக்கு தெரியவில்லை. உடனே அங்கிருந்த மணிகண்டன் தானாக முன்வந்து அந்த இடத்தை அடையாளம் காட்டுவதாக கூறியுள்ளார்.அதனால் ஏட்டு ஸ்ரீதர் அவரை அழைத்துக் கொண்டு வேறொரு தரப்பு புகார் தொடர்பான இடத்திற்கு சென்றுள்ளார் அங்கு வந்த தேவேந்திரன் மணிகண்டனை வெட்டியுள்ளார்.
புகார் சம்பந்தமான விசாரணைக்கு வேறு ஒரு புகாரை சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீஸ்காரர் அழைத்துச் செல்லக்கூடாது அந்த காரணத்திற்காக ஏட்டு ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் தரப்பில் முறையாக செயல்பட்டுள்ளனர் தற்போது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள ஏட்டு ஸ்ரீதர் தான் மணிகண்டனை வெட்டிய தேவேந்திரனை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துள்ளார்.அதன் பிறகு தான் கிராம மக்கள் ஸ்டேஷனுக்கு வந்து பொருட்களை உடைத்துள்ளனர்.
சம்பவம் நடந்த போது ஏட்டு வாகனத்தில் இருந்து உள்ளார்.இடத்தை அடையாளம் காட்டச் சென்ற மணிகண்டன் மட்டும் கீழே இறங்கியுள்ளார் அப்போது தேவேந்திரன் வெட்டியதை தடுத்த ஏட்டு ஸ்ரீதர் அவரை பிடித்து ஸ்டேசனுக்கு கொண்டு சென்று உள்ளார்
கொலை சம்பவம் நடந்த போது ஏட்டு ஸ்ரீதருடன் ஊர் காவல் படையை சேர்ந்த பிரபு என்பவர் இருந்ததாக கூறுவது தவறான தகவல். கொலை சம்பவம் தொடர்பான வழக்கு மூன்று பேர் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர் அதில் மூன்றாவதாக உள்ள ஏட்டு ஸ்ரீதர் மீதுவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.