கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வரும்மான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, இந்த ஓர் ஆண்டில் விளையாட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் இயல் இசை நாடகம், பட்டிமன்றம், சொற்பொழிவு கிராமிய கலைகள், என பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் திருச்சி தெற்கு மாவட்டத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பின் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிறும் சிறப்பாகவும் திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த, கிழக்கு மாநகர பகுதியில் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணனின் ஏற்பாட்டில் மின்னொலியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியினை கடந்த ஜூன் 26, தேதி அன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைக்கப்பட்டது. போட்டியானது 27, 28, 29, ஆகியதேதிகளில் நடை பெற்றது .
இறுதிச்சுற்று 29ஆம் தேதி அன்று நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் அவர்களால் வழங்கப்பட்டது. பரிசுகள் முறையே முதல் பரிசு வார்டு எண் 34 ,J.சில்வியா நெப்போலியன் அணியினர், இரண்டாம் பரிசு : வார்டு எண்:17A, R.M.சுப்பிரமணி, அணியினர் மூன்றாம் பரிசு வார்டு எண் 34A, டி.கருணாநிதிஅணியினர், நான்காம் பரிச வார்டுஎண்: 37, R.விஸ்வநாதன் ஆட்ட நாயகன் வார்டு எண் 34சேர்ந்த திரு சன் ராஜ்குமார்,
தொடர் நாயகன் வார்டு எண் 17A புலிதேவன் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி, நூர்கான், தமிழ்ச்செல்வன், பகுதி கழகச் செயலாளர் பாபு, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
ஒவ்வொரு போட்டியின் தொடக்கத்திலும் பங்குபெறும் அணிகளுக்கு நினைவு பரிசும் போட்டியின் முடிவில் சிறந்த ஆட்டநாயகனுக்கு பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டது.
மைதானத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் எண்ணத்தில் உதித்திட்ட திட்டங்கள் பலவற்றையும் வண்ண பேனர்கள் வடிவில் பவுண்டரி எல்லைகளாக அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலேயே விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் திருச்சி தெற்கு மாவட்ட கழகம் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது.
திருச்சி கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட 72 வார்டுகளின் சார்பாக அணிகள் இந்த போட்டியில் பங்கு பெற்றன. மூன்று நாட்கள் நடைபெற்ற ஒவ்வொரு போட்டியினையும் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நகர ஒன்றிய பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துவக்கி வைத்தனர் என்பது இன்னும் ஒரு சிறப்பு தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்கள் மாநகரங்களுக்கு முன்மாதிரியாக திருச்சி தெற்கு மாவட்டம் திகழ்கிறது என்பதில் திருச்சி தெற்கு மாவட்ட கழக கழக நிர்வாகிகள் பெருமிதம் கொள்கின்றனர்.