கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்
திருச்சி, செப்.14 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிகல்வித். துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்து 2000 பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் காமினி, மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாநகர காவல்துணை ஆணையர் செல்வக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், அப்துல்சமது, மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.