கர்மவீரர் காமராஜர் 121வது பிறந்த நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஜூலை 15 கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் துணை மேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர் மோகன் மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்