மிருதங்கம் வாசிக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

0 288
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்என்பி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி மிருதங்கம் வாசிக்கும் போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இந்த மாணவியை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் மாணவியை பாராட்டினார்.

லால்குடி அருகே ஆங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமா அம்பிகா.இவர் லால்குடியில் உள்ள எல்என்பி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாநில அளவில் நடைபெற்ற கலை பண்பாட்டு திருவிழா போட்டியில் தாள வாத்தியப் பிரிவில் மிருதங்கம் வாசித்து மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற உள்ளார். மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் மாணவி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மாணவிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இசை ஆசிரியர் அவர்களை பாராட்டி மென்மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க லால்குடி அருகே கோமாக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆசைத்தம்பி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.