ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

0 268
Stalin trichy visit

திருச்சி, பிப்.22  திருச்சி கோட்டை பகுதி வெல்லமண்டி தெருவில் அமைந்துள்ள கண் திறந்த ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப்ரவரி 16ஆம் தேதி காவிரி அய்யாளம்மன் படைத்துறையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு எட்டு கால யாக பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று பரிவார யாகசாலை, பூர்ணஹுதி கடம் புறப்பாடு இன்று காலை 7:30 மணிக்கு நடைபெற்று உபசார பூஜை தீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து சரியாக காலை பத்து முப்பது மணிக்கு ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் திருச்சி மாநகரை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கண் திறந்த ஸ்ரீ கருமாரியம்மன் திருப்பணி கமிட்டியினர் மற்றும் கண் திறந்த ஸ்ரீ கருமாரியம்மன் நண்பர்கள் குழு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.