முசிறி அருகே திருஈங்கோய்மலை கோயில் கும்பாபிஷேக விழா

0 184
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 14  திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் தாலுக்கா திருஈங்கோய்மலை கிராமத்தில் அருள்மிகு மரகதாம்பிகா சமேத மரகதாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 63வது சிவ தளமாகும்.அகத்தியர் ஈ வடிவில் இத்தளத்தின் பெருமானை வழிபட்டதாகவும் புராணங்கள் உண்டு மேலும் நக்கீரர் ஈங்கோய் எழுபது என்ற பாடல் தொகுப்பில் இத்தல பெருமானை பாடியுள்ளார்.பல்வேறு சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் திருப்பணிகள் நடைபெற்று வந்தது . திருபணிகள் முடிவடைந்த நிலையில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், யாக வேள்வி, வேதபாராயணம்,
கடம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பின்னர் கோயில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.