திருச்சியில் கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது

0 224
Stalin trichy visit

திருச்சி ஜூலை 14  திருச்சி மேலகல்கண்டா கோட்டை பகுதி சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் ராமபிரசாத் (வயது 22) இவர் மேலக்கலகண்டார் கோட்டை பகுதியில்கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமிலிபானு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராம பிரசாத் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று பாலக்கரை பெல் சி கிரவுண்ட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த யுவராஜ் (வயது 27) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.