உறையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
திருச்சி, ஆக. 9 திருச்சி உறையூர் சோழராஜபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் உறையூர் சோழராஜபுரம் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தின் நாலாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு 108 குத்து விளக்கு பூஜை நேற்றுநடைபெற்றது.
மேலும் சோழராஜபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பக்தர்கள் சார்பாக 10008 வளையல்களை கொண்டு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கல்வி அறிவு சிறக்கவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், குழந்தை வரம் வேண்டியும், திருமண தடை நீங்கவும், குடும்பங்களில் செல்வம் செழிக்கவும் மற்றும் நோய் நொடி இல்லாமல் உலகில் உள்ள மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த குத்து விளக்கு பூஜையில் சோழ ராஜபுரம் பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தனர் அதனைத் தொடர்ந்து குத்து விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது மேலும் இந்த குத்து விளக்கு பூஜையில் வந்திருந்த அனைவருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சார்பாக அன்னதான வழங்கப்பட்டது,
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி வெற்றிவேல் முருகன் கிராம மத்தியஸ்தர்கள் இளைஞர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.