துறையூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்றத்தில் சுமார் 100 வழக்கறிஞர்கள் செயல்பட்டு வருகின்றனர் தற்போது முசிறி பகுதியில் தனியாக புதிய நீதிமன்றம் கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குற்ற வழக்குகள் அனைத்தும் துறையூர் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டு வந்தது தற்போது முசிறியில் நீதிமன்றம் செயல்பட தொடங்கியதை தொடர்ந்து ஜம்புநாதபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வழக்குகள் அனைத்தும் துறையூர் நீதிமன்றத்தில் இருந்து முசிறி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனை கண்டித்தும் வழக்கம் போல ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் உட்பட்ட குற்ற வழக்குகள் அனைத்தையும் துறையூர் நீதிமன்றத்திலேயே வழக்காட ஆவண செய்ய வேண்டும் என கூறி துறையூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க தலைவர் சுரேஷ்குமார் செயலாளர் கோகிலா பொருளாளர் முகமது ரபிக் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்