சட்டப் போராட்டம்: பசுமை பூங்கா பாதுகாப்புக்குழுவுக்கு பாராட்டு
திருச்சி, செப்.24 திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி பகுதியில் உள்ள பசுமை பூங்கா 11 ஏக்கர் நிலத்தை பாதுகாத்து பூங்காவுக்குரிய அனைத்து வசதிகளையும் செய்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர உயர் நீதிமன்றம் 10.06.25 அன்று தீர்ப்பு அளித்துள்ளது.
மாசில்லா சுற்றுச்சூழலை பாதுகாக்க இரண்டு ஆண்டுகளாய் சட்டப் போராட்டம் நடத்திய தூய்மை – பசுமை பூங்கா பாதுகாப்புக் குமு திரு.கே.சந்திரசேகர் அவருக்கு தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம், எக்ஸ்னேரா பாலு ஆகியோர் பாராட்டி, பயனாடை வழங்கினார்கள்.