மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

0 219
Stalin trichy visit

திருச்சி, செப்.24  முசிறி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியை அதே தெருவை சேர்ந்த மதியழகன் (62) என்பவர் அடிக்கடி சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முதியவர் மதியழகனை கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.