உப்பிலியபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா? வனத்துறையினர் விசாரணை

0 44
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்,  உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரம் ஊராட்சி ஓசரப்பள்ளி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்றும், மயில்களை விரட்டியது என்றும் தகவல் பரவியது.

இதனையடுத்து நேற்று காலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுத்தை நடமாட்டம் பற்றி எந்தவித தடயங்களும் இல்லை என தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் கண்டது சாம்பல் நிற காட்டுப்பூனை என்று வனத்துறையினர் தெரி வித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.