குடிபோதையில் வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி
திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). தொழிலாளி. இந்தநிலையில் மதுபோதையில் இருந்த இவர் வீட்டில் இருந்த பீரோவில் தீவைத்துள்ளார். பீரோவில் இருந்த துணியில் பிடித்த தீ வீடு முழுவதும் பரவியது. தகவல் அறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பீரோவில் இருந்த பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.