முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் லோக் அதாலத்!
திருச்சி மாவட்டம் முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்டசட்டப்பணிகள் குழு சார்பில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. இதற்கு உரிமையியல் நீதிமன்ற நடுவர் வேலுச்சாமி தலைமை வகித்து வழக்குகளுக்கு சமரச தீர்வு கண்டு தீர்ப்பளித்தார். மூத்த வழக்கறிஞர்கள்
முன்னிலை வகித்தனர். அப்போது கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு, விவாகரத்து, நிலம் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்றனர். இதில் முடிக்கப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது.