முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சி..

0 279
Stalin trichy visit

முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 163 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் நீதிபதி பாபு வழிகாட்டுதலின்படி முசிறி வட்ட சட்டப்பணிகள் குழு மூலமாக தேசிய மக்கள் நீதிமன்றம் முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் பாக்யராஜ் தலைமை வகித்தார். நடுவர்கள் நிஷாந்தினி, ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் சப்தரிஷி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாஸ்கரன் செயலாளர் சந்திரசேகரன், மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4 உரிமையியல் வழக்குகள், 114 குற்ற வியல் நீதிமன்ற வழக்குகள், 45 வங்கி வழக்குகள் தீர்வு காணப்பட்டது. குற்றவியல் வழக்குகளில் 59 ஆயிரத்து 900 அபராதம் வசூல் செய்யப்பட்டது.
45 வங்கி வழக்குகளில், 39 லட்சத்து 51 ஆயிரம் தீர்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாகிகள்  மற்றும் சட்ட தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.