துவரங்குறிச்சியில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

0 135
Stalin trichy visit

திருச்சி,டிச.15  மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் பிரிவு சாலை விபத்து
துவரங்குறிச்சி காவல்துறை விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 44) மற்றும் சோலை ராஜ் (வயது 25) ஓட்டுநர்கள் இருவரும் தூத்துக்குடியில் இருந்து சுமார் 25 டன் முந்திரி பருப்பு லோடு லாரியில் ஏற்றுக்கொண்டு கொல்கத்தாவிற்கு நேற்று காலை கிளம்பிய நிலையில் லாரியை ஆறுமுகம் ஓட்டி வந்துள்ளனர்.

அப்போது திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சி பிரிவு சாலை அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது துவரங்குறிச்சி பிரிவு சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்கும் போது முதியவர் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் வேகத்தை குறைத்த போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி அருகில் உள்ள பத்தடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்ஓட்டுநர்கள்  இருவரும் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.
இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் காயமடைந்த நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.