திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்

0 38

திருச்சி, மார்ச் 21  அதிமுக  அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர் ப.குமார்  முன்னிலையில் பூத் கமிட்டி அமைத்தல்,  வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தல், இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது,கழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்பது குறித்து ஆய்வு கூட்டம்  நேற்று   வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழைய கோட்டை ஊராட்சியில் மதியம் 12:30 மணி அளவிலும் வையம்பட்டி ஊராட்சியில் மதியம் 1:00 மணி அளவிலும் குமாரவாடி ஊராட்சியில் 1:30 மணி அளவிலும் எலமணம் ஊராட்சியில் 2:00 மணி அளவிலும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர் , மாவட்ட விவசாய பிரிவு செயலாளர்  C.சின்னச்சாமி , வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் N.சேது , மாவட்டத் துணைச் செயலாளர்  பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ , வையம்பட்டி வடக்கு ஒன்றிய  செயலாளர் PVK.C. பழனிச்சாமி , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜமணிகண்டன்,  மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன் , மாவட்ட மீனவர் அணி செயலாளர் ஆறுமுகம்,  மணப்பாறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ் . மேலும் இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், கழக மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், கழக அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.