நேர கண்காணிப்பாளரை தாக்கியவர் கைது

0 231
Stalin trichy visit

திருச்சி ஏப் 7 அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்  மருதூர் சேர்ந்தவர் ராஜமூர்த்தி (52), சத்திரம் பஸ் ஸ்டாண்டில் நேர  கண்காணிப்பாளராக  வேலை செய்து வருகிறார். இவருக்கும் கீழ சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்த மணிகண்டன் (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மார்ச் 5ம் தேதி மணிகண்டன் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அரியலூர் பஸ் நிறுத்தம் அருகே ராஜமூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார். காயம் அடைந்த ராஜமூர்த்தி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.