வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டு தற்கொலை

0 403
Stalin trichy visit

திருச்சி ஏப் 7 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பழஞ்சூரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (26) . டிப்ளமோ முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அங்கு இவர் பணத்தை இழந்ததாக தெரிகிறது . இந்நிலையில் திருச்சி துவாக்குடி வ .உ .சி நகர் ஆறாவது தெருவில் உள்ள அவரது உறவினர் லட்சுமி (52) என்பவர்  வீட்டில் இருந்து வந்த ஸ்ரீபன் ராஜ், மார்ச் 6ம் தேதி காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அரை எடுத்து தங்கி உள்ளார். அன்று வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகத்தின் பேரில் லாட்ஜ் ஊழியர்கள் உள்ளே சென்று  பார்த்தபோது அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . இதுகுறித்து அவரது உறவினர் லட்சுமி அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இதே போல்   திருச்சி உறையூர் நாயக்கன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (26) பெயிண்டர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவரது மனைவி செல்வலட்சுமி (21).  இந்நிலையில் புகழேந்தில் மார்ச் 5 ஆம் தேதி மது போதையில் தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தன் அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் உள்ளே சென்றபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் உறையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.