பெண் தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விட்ட வாலிபர் கைது

0 470
Stalin trichy visit

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வாசுகி(58). இவர் சிறுபான்மையினர் பிரிவு தாசில்தாராக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது எதிர்வீட்டில் வசிக்கும் ரமேஷ் (33) என்பவர் மது போதையில் வாசுகியிடம் பிரச்சினை செய்து, தகாத வார்த்தைகளால் திட்டி அவருக்கும், அவரது கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தாசில்தார் வாசுகி பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.