மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
திருச்சி, ஜூலை 26 மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தொட்டியபட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மணப்பாறை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மணப்பாறை காவல் ஆய்வாளர் சீனி பாபு தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரெட்டியபட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜசேகர் என்பவர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் ராஜசேகரை கைது செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.