மின் சாதனப்பொருட்களில் மறைத்து தங்கம் கடத்தி வந்தவர் கைது
சிங்கப்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது நூதன முறையில் மின் சாதன பொருட்களில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
349 கிராம் எடை உள்ள தங்கம் சர்வதேச சந்தையின் மதிப்பு ரூ.18.4 லட்சம் எனக் கூறப்படுகிறது,நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டு தங்கத்தை எடுத்து வந்த நபரை பிடித்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.