கஞ்சாவை வீட்டில் பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

0 275
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 14  திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் ஏசியன் பெயின்ட் கடை அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மில் காலனி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி தனலெட்சுமி (வயது 67) என்பவரை கடந்த 16.07.2025-ம் தேதி கைது செய்து திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு குற்ற எண். 158/25 U/s 8(c) r/w 20(b)(ii)(B) NDPS Act-ன்படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

 மேற்படி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான தனலெட்சுமி மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செ.செல்வநாகரத்தினம், பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியரால்  தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 14.07.2025-ஆம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 63 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.