தச்சன்குறிச்சி திரிபுரசுந்தரி சமேத திருபிரம்பீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

0 374
Stalin trichy visit

திருச்சி, செப். 9  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு திருபிரம்பீஸ்வரர் உடனாய திரிபுரசுந்தரி கோவில் உள்ளது.
இக்கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 1ஆம் தேதி கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 125க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கண்டு விளக்கு பூஜை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அம்மனுக்கு 108 மந்திரங்கலுடன் வழிபாடு நடைபெற்றது. மேலும் விநாயகரைப் போற்றி பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் லால்குடி தாசில்தார் முருகன், காணகிளியநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி, கிராம முக்கியஸ்தர்கள் ராமர், மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி லால்குடி ஒன்றிய தலைவர் சதீஷ்குமார் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.