மணப்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
மணப்பாறை டிசம்பர் 15 மணப்பாறை பேருந்து நிலையம் மற்றும் விராலிமலை சாலையில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்கள் இரண்டு டிவிசன்களிலும் கையொப்பமிட்டு மணப்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் பதவி உயர்வு சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்பிட வேண்டும். துப்புரவு பணி மேற்பார்வையாளர் பணிக்கு வெளியிலிருந்து நியமனம் செய்து உள்ளதை திரும்ப பெற வேண்டும்நகராட்சி விதிகளின் படியும் கடந்த காலங்களில் நடைமுறை படியும் உள்ளூர் பணியாளர்களுக்கு விகிதாச்சார ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு அளிக்காத நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளிக்காமல் உள்ளது உடனடியாக வழங்கிடஒப்பந்த பணியாளர்களின் மூன்றாண்டு பணி முடித்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்திடஅரசாணை எண் 62 இன் படி ரூபாய் 708 தினக்கூலி வழங்கிடதூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யும் போது வாரிசுப்பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்உள்ளூர் பணியாளர்களை நியமனம் செய்திட வேண்டும் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இக் கோரிக்கைகள் குறித்து நகர் மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ் நகராட்சி ஆணையர் உடன் ஏ ஐ டி யு சி உள்ளாட்சி பணியாளர்களின் மாவட்ட தலைவர் இந்திரஜித் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட துணை செயலாளர் ஜனசக்தி உசேன் கௌரவத் தலைவர் சௌகத் அலி துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் தாங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் பணி உயர்வு உங்களுக்கு முன்னுரிமை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தும் என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளர் தோழர்கள் தொழிலாளர் பணிக்கு திரும்பினார்கள்