மண்ணச்சநல்லூர் எழுத்தாளருக்கு சிறந்த எழுத்தாளர் விருது

0 259
Stalin trichy visit

திருச்சி, ஜன.1  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் குணாவிற்கு புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கி கௌரவித்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணா.இவர் கடந்த கால் நூற்றாண்டுகளாக பத்திரிகைகளில் தொடர்ந்து கதை,கவிதை,கட்டுரை எழுதி வருகிறார்,தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இலக்கியக் கூட்டங்களில் கலந்துக் கொண்டு கவியரங்கம்,பட்டிமன்றம் ஆகியவற்றில் பங்கேற்று இலக்கியப் பணியும் செய்து வருகிறார்.

2006-2008 ஆண்டுகளில் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பை செவ்வனே செய்தமைக்காக இந்திய ஜனாதிபதி விருது பெற்றார், அவரது பொதுநலச் சேவையைப் பாராட்டி, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் 2024 ம் ஆண்டு சமூகசேவகர் விருதும்
உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம் சார்பில் 2025 ம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விருதும் ஈரோடு இலக்கிய விழாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம் ஈகைச் செம்மல் மற்றும் செந்தமிழ்ச்செம்மல் விருது(2025)
தமிழ்த் தாய் அறக்கட்டளை கரிகால் சோழன் நினைவு கவிமுரசு விருது(2025),
பாரதி கலைக் கழகம் பைந்தமிழ்செல்வர் விருது(2025), 12.12.2025 அன்று அகில இந்திய திருச்சிராப்பள்ளி வானொலியில் இலக்கிய ஆளுமை நிகழ்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்ட வாழையூர் குணா சிறுகதைகள் நூல் குறித்த கலந்துரையாடல்,
சென்னை தமிழ் மன்றம் கர்மவீரர் காமராசர் விருது(2025) என பல்வேறு விருதுகளைப் பெற்று வரும் வாழையூர் குணா அவர்களுக்கு புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதினை சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் மயிலம், பொம்மபுர ஆதினம் 20 ஆம் பட்டம்  வழங்கினார்.

இந்நிகழ்வில் T. K. இராஜேந்திரன் முன்னாள் DGP, தமிழ்நாடு,முனைவர், மூ. லாவண்யா சமூக சேவகர், மணிகண்டன், மாநில பொதுச் செயலாளர், Dr. T. G. மனோகர் நிறுவனர்,
A. D.பண்டரிநாதன், மாநிலத் தலைவர், P. B. சக்திவேல்., மாநில செயலாளர் மற்றும் விழா குழுவினர்கள். புதுச்சேரி சங்க பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.