தொட்டியம் அருகே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
திருச்சி, டிச. 11 திருச்சி மாவட்டம், தொட்டியம் எம் புத்தூர் ஊராட்சி மூங்கில் துறையில் ஸ்ரீ பால விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மூங்கில் துறை பொதுமக்கள் இளைஞர்கள் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்து முதல் கால பூஜை ,இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை முடிவுற்று ஸ்ரீ விநாயகர் வழிபாடு, புண்ணியா வாகனம், கணபதி ஹோமம்.. நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று கடம்புறப்பாடு செய்து ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷே விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் எம்.புத்தூர், மூங்கில் துறை, நத்தம் ,கூன்ராக்கம் பட்டி .குறிஞ்சி நகர், வேந்தன்பட்டி, தொட்டியபட்டி, உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.