நியாய விலை கடையில் நடைபெற்ற குறைதீர் முகாம்

0 254
Stalin trichy visit

திருச்சி, டிச. 11 திருச்சி மாவட்டம்,  முசிறி அந்தரப்பட்டி நியாய விலை கடையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு முசிறி வட்ட வழங்கல் அலுவலர் வாசுகி தலைமை வகித்தார். சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஜீவா அனைவரையும் வரவேற்றார். பொதுமக்களிடமிருந்து, முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பெயர் நீக்கம் , செல்போன் எண் மாற்றம், கடை மாற்றம், அடையாள அட்டை ,புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28 மனுக்கள் பெறப்பட்டு அனைத்தும் தீர்வு காணப்பட்டது. இறுதியில் விற்பனையாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.