நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
திருச்சி, ஆக.7 திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தெற்கு அரங்கூரை சேர்ந்தவர் கிரி (39) .இவரது மகளுக்கு வயது 17. கிரியின் மகள் முசிறியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி வீட்டிலிருந்த தனது மகளை காணவில்லை, பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதை அடுத்து கிரி தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன இளம்பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர்.