பெரியார் திருவுருவப்படத்திற்கு மேயர் மு.அன்பழகன் மலர் தூவி மரியாதை
தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மேயர் மு.அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமூகநீதி நாள் உறுதிமொழியினை மேயர் வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் நகரப்பொறியாளர் பொறுப்பு சிவபாதம், செயற்பொறியாளர் குமரரேசன், உதவி ஆணையர்கள் பிரபாகரன், எஸ். மீனாட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
