மணப்பாறையில் நம்ம ஊரு சூப்பர் சிறப்பு விழிப்புணர்வு இயக்கம்
மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில், நம்ம ஊரு சூப்பர் சிறப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ், ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிகளை தடை செய்வது தொடர்பாகவும், நெகிழிக்கான மாற்று பயன்பாட்டினை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர், தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி செயலாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.