கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 299
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நடராஜபுரம் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருத்துவத்துறையின் சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமினை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  துவக்கி வைத்தார் இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் முதியோர் நல மருத்துவம் பல் மருத்துவம் நாட்டு வைத்தியம் சித்த வைத்தியம் உடல் உறுப்பு தானம் ரத்த தானம் கண் சிகிச்சை மகப்பேறு பெண்களுக்கான மருத்துவம் கொரோனாவிற்கான தடுப்பூசிகள் கோவாக்சின் கோவைஷீல்ட் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் இந்த முகாமினால் பயன் பெற்றனர்


இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் கே எஸ் எம் கருணாநிதி சேர்மன் சத்யா கோவிந்தராஜ் நடராஜபுர ஊராட்சி மன்ற தலைவர் சத்தியகீதா தாஸ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.