கிணற்றில் தவறி விழுந்து தனியார் பால் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பாம்பாட்டியபட்டியைச் சேர்ந்தவர்
அந்தோனிசாமி (வயது 49). மணியாரம்பட்டியில் உள்ள
தனியார் பால் நிறுவன ஊழியராக உள்ளார். மண்பத்தை கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தபோது தன்னிச்சையாக கிணற்றில் விழுந்ததில் சகதியில் மாட்டி கொண்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வையம்பட்டி காவல்நிலைய எஸ்.எஸ்.ஐ., ஜான் வில்லியம் விசாரணை நடத்தி வருகின்றனர்.