மதுபோதையில் முந்திரி சருகுகளை எரித்தவர் தீக்காயமடைந்து உயிரிழப்பு
திருச்சி மாவட்டம்
பச்சைமலை சேம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமர்
திருமணம் ஆகாத நிலையில் ராமர் தாயுடன் வசித்து வந்துள்ளார் .
ராமர்
சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது மது அருந்திவிட்டு தான் என்ன செய்கின்றோம் என்பது கூடத் தெரியாத நிலையில் அருகில் உள்ள முந்திரி தோப்பிற்கு சென்று அங்குள்ள காய்ந்த இருந்த சருகுகளுக்கு தீ வைத்துள்ளார் தீ மள மளவென்றுகொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது அது போதையில் இருந்த ராமருக்கு வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் தீயில் விழுந்துள்ளார் இதனால் இவர் மீது தீ பற்றி முகம் கை கால் என உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது இதைத் தொடர்ந்து
இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு
டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர் பின்பு அங்கிருந்து துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக திருச்சி சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் உயிரிழந்தார். இச்சம்பவம் இப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து உப்பிலியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்