பாஜக எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

0 283
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் கடைவீதியில் பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தியா மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகள் செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூசன் சரண்சிங்கை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தியும்,போராட்டம் நடத்துவர்களின் மீதான அடக்குமுறையை நிறுத்த வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் கடைவீதியில்
சிஐடியு, தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைது இந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திய மாணவர் அமைப்பு இணைந்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூசன் சரண்சிங்கை பதவி நீக்கம் செய்து கைது கைது செய்து வலியுறுத்தியும் போராட்டம் நடத்துவர்களின் மீதான அடக்குமுறையை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆனைமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தார்ப்பாட்டத்தில் இந்திய கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் பூமாலை,சிஐடி மாவட்ட செயலாளர் சம்பத், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் பழனிச்சாமி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் இந்திய மாணவர் அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.