கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

0 303
Stalin trichy visit

மணப்பாறையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் பசு மற்றும் எருமைப் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும், ஐம்பது சதவீத மானியத்தில் தீவனத்தை வழங்கவேண்டும், ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் மூடப்படுவதை தடுக்க வேண்டும், ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் பணி பாதுகாப்பும் செய்திட வேண்டும், அறிஞர் அண்ணா இன்சூரன்ஸ் திட்டத்தையும் விபத்து காப்பீட்டையும் உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.