பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ( 9.9.22) திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று , முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி, அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, பொன்மலைப்ட்டி இருதய மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் 327 மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 16 இலட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளையும், ரூபாய் 2.50 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி நூலகத்தினை திறந்து வைத்து ஆயிரம் புத்தகங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ர.பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.சுவாமி முத்தழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.என்.சேகரன், மாநகராட்சி துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா, மண்டலத் தலைவர் திரு.மதிவாணன், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் திரு.இ.எஸ்.எம்.கருணாநிதி, பள்ளித் தலைவர்.திரு.கே.என்.
ஆனந்த மூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.சத்யா கோவிந்தராஜ்,. கூத்தப்பார் பேரூராட்சித் தலைவர் திரு.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்